தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

0 349
Stalin trichy visit

தமிழக முதல்வர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலினால் சமூக நீதி நாள் என அறிவிக்கப்பட்ட தந்தை பெரியாரின் பிறந்த தினமான இன்று அவருடைய பிறந்த நாள் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோளுக்கு இணங்க அனுசரிக்கப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ், கோவிந்தராஜன், அரங்கநாதன், செந்தில், மதிவாணன், k.s.m.கருணாநிதி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பகுதி நிர்வாகிகள், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.