பெரியார் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

0 466
Stalin trichy visit

திருச்சியில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள தி.மு.க. முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் பெரியாரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து சமூக நீதி உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ, மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில்பெரியசாமி, இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் செவந்திலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜய ஜெயராஜ், பகுதி செயலாளர் கண்ணன், மோகன்தாஸ், இளங்கோ, ராம்குமார் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.