புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று‌ ஸ்ரீரங்கம் கோவிலில் அனுமதி மறுப்பு – பக்தர்கள் ஏமாற்றம்!

0 379
Stalin trichy visit

ஆடி வெள்ளி,ஆவணி ஞாயிறு போன்ற சிறப்பான தினங்களை போல புரட்டாசி சனி என்பது மிகவும் இந்துக்களிடையே நம்பிக்கை பெற்ற நாளாக உள்ளது.

பெருமாள் திருமலையில் அவதரித்தது புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் என்று கூறப்படுகிறது. இந்நன்னாளில் பெருமாளுக்கு விரதமிருந்து வேண்டினால், வேண்டியது கிட்டும் என்பது நம்பிக்கை.

கொரோனா தொற்று பரவல் காரணமாக வாரத்தின் இறுதி நாட்களான‌ வெள்ளி,சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் புரட்டாசி சனிக்கிழமையான இன்று தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.ஏமாற்றம்‌ அடைந்த பக்தர்கள் கோவிலின் வாசலில் நின்று பெருமாளுக்கு சூடம் ஏற்றி,தேங்காய் உடைத்து தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழக அரசு அடுத்து அறிவிக்கப்படவுள்ள தளர்வுகளில் வெள்ளி,சனி,ஞாயிறு உட்பட குறிப்பாக புரட்டாசி சனியன்று கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க பரிசீலனை செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.