இடப்பிரச்சினையில் விவசாயியை கொலை செய்தவர் கைது

0 331
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் அருகே உள்ள ஆலம்பட்டிபுதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(38) விவசாயி, இவருக்கும் இவரின் வீட்டின் அருகே வசித்து வரும் சுப்பிரமணி(55) விவசாயி இருவருக்கும் நீண்ட நாட்களாக இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல இருவருக்கும் தகராறு நடந்துள்ளது. இதில் கோபம் கொண்ட கண்ணன், சுப்பிரமணியை அடித்து உதைத்துள்ளார்.

இதில் மயங்கி கீழே விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்த புகாரின்பேரில் இனாம்குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு உதயகுமார், சப் இன்ஸ்பெக்டர் சத்யதேவி வழக்குபதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.