பா.ம.க. சார்பில் வீரவணக்க நாள் அனுசரிப்பு

0 468
Stalin trichy visit

முசிறி கைகாட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வீரவணக்க நாள் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சி திருச்சி புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் செப்டம்பர் 17-ல் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கு.லட்சுமணகுமார் தலைமை வகித்து கைகாட்டியில் அமைக்கப் பட்டிருந்த தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை பொருளாளர் பாலகிருஷ்ணன், மாநில மாணவரணி துணை செயலாளர் ராஜ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வீரவணக்க உறுதிமொழி ஏற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.