குற்ற வழக்கில் தேடப்பட்டவர் வெளிநாட்டிலிருந்து வந்தபோது கைது
துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரது மகன் முகமது ரியாஸ் கான்(37).
இவர் மீது கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை போலீஸ் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது.
அதைத் தொடர்ந்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் ரியாஸ் ரியாஸ்கானை ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து கீழக்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து கீழக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.