நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் பரிதாப சாவு!

0 520
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உள்ள காளியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல்(59). இவர் காளியாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.