“நீட்” தேர்வால் சமமற்ற போக்கு திணிக்கப்படுகிறது : அருண்நேரு எம்.பி. கன்னிப்பேச்சு

0 353
Stalin trichy visit

புது தில்லி, ஆக. 7 நீட் தேர்வால் சமமற்ற போக்கு திணிக்கப்படுவதாக மக்களவையில் பெரம்பலூர் தொகுதி திமுக உறுப்பினர் அருண் நேரு தனது கன்னிப் பேச்சின் போது கூறினார்.
மக்களவையில் நிதி மசோதா மீது நேற்று நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசியபோது, திமுக சார்பில் பேச அருண் நேருவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது அவர், ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, மனித ஆற்றல், நீட் தேர்வு உள்ளிட்ட விசயங்களை பதிவு செய்தார்.
அதன் விவரம்: இந்தியா என்பது மாநிலங்களின் யூனியன். ஆனால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் நிதி மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று மக்களைப் பாதிக்கக் கூடிய பல முக்கிய பிரச் சனைகள் பதிவு செய்யும்போது, ஆளும் கட்சி சார்பில் அவையில் மூத்த உறுப்பினர்கள் இங்கே இருப்பதில்லை. மாநில அரசுகள் அதன் வளர்ச்சித் திட்டங்களுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த ஒன்றிய அரசு போதிய வளங் களைத் தருவதில்லை.
ஒன்றிய நிதியமைச்சர் வேலை வாய்ப்பு குறித்தும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. ஆனால், இந்த நாட்டில் பெரும்பான்மை இளைஞர்கள் முறைப் படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றுவதில்லை. இந்த பட்ஜெட்டில் அசல் மனித ஆற்றலின் தேவை குறித்து சரியாகப் பேசப்படவில்லை. தொழிலாளர் வைப்பு நிதி செலுத்தும் முறையான நிறு வனங்களைப்பார்க்கும் போது அதில் உள்ள அய்ந்து சதவீதத்துக்கும் குறைவான மனித ஆற்றலை பற்றியே பட்ஜெட்டில் பேசப்பட்டுள்ளதை அறியலாம்.
எனவே, உண்மையாக பயிற்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு நிதியமைச்சரின் பேச்சு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதனால், முறைப்படுத்தப்படாத பொருளாதாரத்தில் தொடர்பு டையவர்களையும் கவனத்தில் கொண்டு பட்ஜெட்டில் சில அம் சங்களை சேர்க்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயத்துக்கு தேவையான உரம், மக்களுக்குத் தேவையான உணவு, இளைஞர்களுக்குத் தேவையான கல்வி மிக முக்கியமானவை. முந்தைய பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது, உரத்துக்கு 13.5 சதவீதம், உணவுக்கு 3.1 சதவீதம், கல்விக்கு 2.1 சதவீதம் நிதி குறைக்கப்பட்டுள்ளது. இப்படி இருந்தால் ஒரு நாடு எப்படி வளர்ச்சிப் பாதையில் செல்லும். நீட் தேர்வு குறித்து ஒன்றிய அரசு விளக்கும் போதெல்லாம் வெளிப்படைத்தன்மை, சமத்துவம் ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. இந்த நடைமுறை சிறப்பானதாக இருக்கலாம் என ஒன்றிய அரசு கருதலாம். ஆனால், அதில் குறைபாடுகள் உள்ளன. இந்த அரசின் தவறான கொள்கையால் எனது தொகுதிக்குள்பட்ட பகுதியில் வசித்து வந்த மாணவி அனிதா உயிரிழந்தார். இந்த தேர்வு நடைமுறை எதை தரும் என்பது தேவையில்லை. அதன் முடிவுகள் என்னவாகின்றன என்பதே முக்கியம்.

நீட் நடைமுறை என்ற பெயரில் சமமற்ற போக்கு திணிக்கப்படுகிறது. எனவே, நிலைமை கையை மீறிச்செல்லும் முன்பாக, இதில் தொடர்புடைய ஒவ்வொருக்கும் தனிப்பட்ட முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துங்கள் என்று அருண் நேரு பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.