வாகனத்தில் சுழல் விளக்கு வைத்து வலம் வந்த போலி ஆசாமிகள் 2 பேர் கைது

0 738
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், காட்டூர் எல்லைக்குடி விக்னேஷ் நகரைச் சேர்ந்த கிரண்சிங் (40), ஓய்வு பெற்ற தனியார் செக்யூரிட்டி அதிகாரி Citizen Industrial Security Protection Force Private Ltd (CISPF) இவர் தனக்கு சொந்தமான காரில் நீண்டகாலமாக சுழல் விளக்கு பொருத்தி தன்னை அரசு உயரதிகாரியாக காட்டிக் கொண்டு உலா வந்துள்ளார்.

 

மேலும் அதே காரில் பிரஸ் என்றுநளவ ஸ்டிக்கரும் ஒட்டியுள்ளார். இந்நிலையில் இன்று (23.06.21) மதியம் திருச்சி தலைமை தபால்நிலையம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சுழல் விளக்கு பொருத்திய தனது காரில் ஓட்டுநர் மணிகண்டன் (23) உடன் வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கண்டோன்மெண்ட் காவல்நிலைய காவலர்கள் மேற்நபரை விசாரணை நடத்தியதில் அவர் சுழல் விளக்கு பொருத்தியதற்கும், பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டியதற்கும் உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து காவல்துறையினர், வாகனத்தையும் கைப்பற்றினர்.
இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக யாரேனும் செயல்பட்டால், அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.