திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி செவல்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 15ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி பள்ளிக்கு செல்லவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் விசாரித்த போது ஒருவர் கடத்திச் சென்றதாக கூறப்பட்ட நிலையில் உடனே இதுதொடர்பாக துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் விசாரணை செய்ததில் கஞ்சநாயக்கன்பட்டி அருகே உள்ள செட்டியபட்டியை சேர்ந்த சின்னையா(வயது 19) என்பவர் கடத்திச் சென்றதாக தெரியவந்தது இதையடுத்து இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, சின்னையா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.