திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

0 292
Stalin trichy visit

திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில் பிட் இந்தியா இயக்கம் மற்றும் இந்திய தொழிற் கூட்டமைப்பு சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் காலநிலை மாற்றம், மாணவர்களின் விளையாட்டு நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 4 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பேரணி நடந்தது.

என்.ஐ.டி. நிறுவனத்தின் இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் இந்த பேரணியை தொடங்கி வைத்து பேசும்போது, காலநிலை மாற்றம் பற்றியும், தினமும் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.