ஜே.இ.இ. மெயின் தேர்வில் அரசு பள்ளி மாணவர் சாதனை

0 316
Stalin trichy visit

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகம் (என்.ஐ.டி.) மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும், திருச்சி மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பிளஸ்-2 பயிலும் ஜே.இ.இ. தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்கு தனியாகதகுதித் தேர்வு வைத்து 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு என்.ஐ.டி. மாணவர்களின் கற்பித்தல் மையம் மூலம் வார விடுமுறை நாட்களில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் பயிற்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களில் 2019-ம் ஆண்டில் இருவரும், 2020-ம் ஆண்டில் 4 பேரும் தேர்ச்சி பெற்று படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான (2021) ஜே.இ.இ. மெயின் தேர்வில் இந்தப் பயிற்சியில் பங்கேற்ற திருச்சி மாவட்டம் செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அருண்குமார் 98.24 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் தரவரிசைப் பட்டியலில் அகில இந்திய அளவில் 17,061-ம் இடம், ஓ.பி.சி. என்.சி.எல்-ல் 3,649-ம் இடம் பெற்றுள்ளார்.

இது குறித்து இந்த பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், என்.ஐ.டி. மாணவருமான ரோகித் கூறுகையில், வார விடுமுறை நாட்களில் இந்த மாணவர் களை என்.ஐ.டி.யிலேயே தங்க வைத்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட் டதால், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்றார். திருச்சி என்.ஐ.டி. இயக்குநர் மினி ஷாஜி தாமஸ், கற்பித்தல் மையத்தின் செயல்பாடுகளை பாராட்டியதுடன், ஜே.இ.இ. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் அருண்குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.