நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் காலியாக உள்ள பதவிகளை விரைவில் நியமனம் செய்ய வலியுறுத்தல்
திருச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். அமைப்பின் பொதுச் செயலாளர் மோகன் ஆண்டறிக்கை வாசித்து சிறப்புரையாற்றினார். பொருளாளர் நாராயணன் ஆண்டு தணிக்கை அறிக்கை வாசித்தார். முன்னதாக திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது கனி அனைவரையும் வரவேற்றார்.
நிர்வாகக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்ட புதிய உறுப்பினர்களை பொதுக்குழுவின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. கூட்டத்தில் நகராட்சியில் வழங்கப்படும் வீட்டு வரி ரசீது ஆங்கிலத்தில் தருவதை பழைய முறைப்படி தமிழில் ரசீது தர வேண்டும். நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் காலியாக உள்ள தலைவர் உறுப்பினர் பதவிகளை விரைவில் நியமனம் செய்ய அரசை வலியுறுத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.