திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் பெண்கள் விடுதி நாளை திறப்பு

0 473
Stalin trichy visit

திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் பெண்கள் விடுதி மற்றும் மேம்பட்ட உற்பத்தி சிறப்பு மையத்தினை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் நாளை (திங்கட்கிழமை) காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் என்.ஐ.டி. திருச்சி இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் முன்னிலை வகிக்கிறார். இதில் 400 மாணவர்கள் தங்கும் இடவசதியுடன் கூடிய பெண்கள் விடுதியையும், மேம்பட்ட உற்பத்தி சிறப்பு மையத்தையும் திறந்து வைக்க உள்ளார். மேம்பட்ட உற்பத்தி மற்றும் தானியங்கல் சிறப்பு மையமானது முப்பரிமாண உலோக அச்சிடுதல் கருவி, பெம்டோவினாடி நுண்பொருத்துதல் கருவி ஆகிய அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்க உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.