மத்திய அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் மத்திய மாவட்டம் சார்பில் மத்திய அரசு கொண்டு வரும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுத்தும், பெட்ரோல்- டீசல் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதையும், விலைவாசி உயர்வு பொருளாதார சீரழிவு தனியார் மயமாக்கல் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது உள்ளிட்ட ஒன்றிய அரசின் ஜனநாயக மக்கள் விரோதப் போக்கை கண்டித்து மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, செயற்குழு உறுப்பினர் செவந்திலிங்கம், பகுதி செயலாளர்கள் கண்ணன், இளங்கோ, மோகன்தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் மன்னச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அவரது இல்லத்தின் முன்பு கருப்பு கொடியுடன் பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து திருச்சி கருமண்டபம் பகுதில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவரது இல்லத்தின் முன்பு கருப்பு கொடியுடன் பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.