ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தெற்கு மாவட்டத்தில் போட்டியிட 20க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு!

0 364
Stalin trichy visit

திருச்சி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பை தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்ப்பட்ட, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய வார்டு எண்-10, வையம்பட்டி ஒன்றியம் அமையபுரம் ஊராட்சி, வார்டு
எண் -6, ஆகிய இடங்களில் ஊரக உள்ளட்சியில் காலியாக உள்ள பகுதிகளில் நடைபெறக்கூடிய தேர்தலிற்கு சுமார் 20 நபர்களுக்கு மேல் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்றுக் கொண்டனர். நாளை 21/09/21 அன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, நாளை மறுநாள் 22/09/21 வேட்பாளர் மனு தாக்கல் செய்வார்கள். இதற்கான தேர்தல் வரும் 09.10.2021 அன்று நடைப்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.