சமயபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து மரணம் – கோயில் நடை அடைப்பு!

0 647
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மனை தரிசனம் செய்ய பொது தரிசன வரிசையில் சென்ற போது திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.உடனடியாக கோயில் நடை அடைக்கப்பட்டது.

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவைச் சேர்ந்த பிச்சைமுத்து மகன் மோகன்ராஜ்(33).இவர் வழக்கறிஞர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராஜேஷ்வரி என்ற மனைவியும்,8 வயதில் தனுஸ்ரீ என்ற மகளும், 3 வயதில் ஹர்ஷன் என்ற மகனும் உள்ளனர் . இன்று இரவு 8 மணியளவில் அம்மனை தரிசனம் செய்ய சமயபுரம் கோவிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் தனியாக வந்துள்ளார். அப்போது பொது தரிசன வரிசையில் சென்றவர் கோயில் உள் பிரகாரத்தில் சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளார்கள் பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து சமயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறனர்.

கோயில் உள்பிரகாரத்தில் மயங்கி விழுந்த பக்தர் உயிரிழந்தால் உடனடியாக கோயில் நடை அடைக்கப்பட்டது. ஆகமவிதிப்படி நாளை காலை 5 மணி முதல் 8.30 மணி வரை பரிகார பூஜைகள் நடைபெற்ற பிறகு காலை 9 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்படும் என கோயில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.