மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

0 754
Stalin trichy visit

மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் முன்பு சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் 7 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை மதிப்பளிக்காமல் இருக்கும் மத்திய அரசினை கண்டித்தும், மேகதாதுவில் அணைகட்ட கூடாது என்பதற்காக டெல்லி சென்று போராட்டம் நடத்த அனுமதிக்க கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு  தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் படித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.