திருச்சி மெயில் செய்திகள் எதிரொலி – சேதமடைந்திருந்த 2 மின்கம்பங்கள் ஒரு மணி நேரத்தில் மாற்றம்!

0 742
Stalin trichy visit

திருச்சி மெயில் இணையதளம் மூலமாக தொடர்ந்து அரசியல் நிகழ்வுகள், திருச்சியில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறோம். இதுமட்டுமல்லாமல் மக்களின் குறைகளையும், வரும் தகவல்களின் அடிப்படையில் உடனடியாக அதற்கு தீர்வு காணும் வகையில் தொடர்ந்து திருச்சி மெயில் இணையத்தளமானது செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து மக்களின் பிரச்சினைகள் அடிப்படைத் தேவைகளை, மக்களின் பிரதிநிதிகளுக்கு, அரசு அதிகாரிகளுக்கும் அடையாளப்படுத்தி காட்டி வருகின்றோம்.

 

இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் மணிக்கூண்டு அருகில் மின் கம்பம் 2 சேதமடைந்த நிலையில் இருப்பதாக திருச்சி மெயில் இணையதளத்திற்கு வாசகர் ஒருவர் புகைப்படத்துடன் கூடிய பதிவை அனுப்பி இருந்தார்.
இன்று காலை செய்தி வெளியிட்டு இருந்தோம். இது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கவனித்திற்கு சென்றதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதி மின்சார துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக  தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் ஒரு மணி நேரத்தில் எம்எல்ஏ அதிரடியாக அந்த இடத்திற்கு மின்சார வாரிய ஊழியர்களை அனுப்பி ஆய்வினை மேற்கொண்டார்.

 மேலும் நாளை அந்த மின் கம்பங்கள் சரி செய்யப்படும் எனவும் மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சி மெயில் இணையதளம் மூலமாக ஒரு மணி நேரத்தில் தீர்வு வழங்கிய கிழக்கு தொகுதி எம்எல்ஏ விற்கும் தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
உங்கள் பகுதி பிரச்சனைகள் அடிப்படைத் தேவைகளை எங்களுக்கு அனுப்பி தீர்வு காண 93424 23530, 98424 70444 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யலாம்

Leave A Reply

Your email address will not be published.