ஆறுநாட்டு வேளாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் திருச்சி சாரதாஸ் டி.மணவாள பிள்ளைக்கு பாராட்டு
திருச்சி திருவானைக்காவல் ஏ.வி.எஸ். பவளவிழா ஹாலில் ஆறுநாட்டு வேளாளர் சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் ரமேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ராஜா வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்து பேசினார். முன்னதாக உபதலைவர் சதீஷ்வரன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் வக்கீல் ராமமூர்த்தி, சண்முகநாதன், ராமராஜ், ராஜாஜி மற்றும் அமுதா, வாசுகி ஆகியோர் சாதிப் பட்டியலில் ஆறுநாட்டு வேளாளர்களை இணைப்பது குறித்தும், சங்க வரலாறு மற்றும் பெண்கள் முக்கியத்துவம் குறித்தும் பேசினர். சங்க கணக்குகளை முறைப்படுத்தி கொடுத்த லட்சுமி பிரபா கவுரவிக்கப்பட்டார்.
கூட்டத்தில் திருவெள்ளறையில் திருமண மண்டபம் கட்டுவது என்றும், முதியோர் இல்லம் அமைப்பது என்றும், கோத்திர முறையில் திருமணம் செய்து வைப்பது மற்றும் நலத்திட்ட உதவிகள் சுகாதார அலுவலகம் அமைப்பது என்றும், ஏ.வி.எஸ். பவளவிழா வளாகம் மற்றும் கல்வி நிதி என்று பல்வேறு வகையில் உதவி செய்த திருச்சி சாரதாஸ் டி.மணவாள பிள்ளைக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.