திருச்சி காவிரி மருத்துவமனையின் சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை குழுவினருக்கு விருது

0 328
Stalin trichy visit

தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களிடமிருந்து பெறப்படுகின்ற சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சையில் மிகச்சிறந்த செயல்பாட்டிற்காக திருச்சி தென்னூரில் அமைந்துள்ள காவிரி மருத்துவமனையின் சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை குழுவினருக்கு, தமிழ்நாட்டின் உறுப்பு மாற்று சிகிச்சை அதிகார அமைப்பின் (டிரான்ஸ்டான்) பாராட்டை பெற்று விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி, அரசு சார்பில் இவ்விருதினை வழங்கினார். தயாநிதி மாறன் எம்.பி., மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,” உறுப்பு மாற்று சிகிச்சையில் இந்தியாவில் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. எனினும், இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது உறுப்பு தானம் வழங்குவதிலும், உறுப்பு மாற்று சிகிச்சைகள் செய்வதிலும் சற்று தொய்வு காணப்பட்டது. தற்போது உறுப்பு மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது அதிகரித்து வருகிறது. உறுப்பு மாற்று சிகிச்சையில் தொடர்ச்சியான, சிறப்பான பங்களிப்பை செய்து வருவதற்காக காவிரி மருத்துவமனையை நான் மனதார பாராட்டுகிறேன்” என்றார்.

நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனையின் பெசிலிட்டி இயக்குனர் அன்புச்செழியன் பேசுகையில்,”தமிழக அரசிடமிருந்து இந்த பாராட்டு விருது பெறுவது எங்களுக்கு மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. கடந்த 10 ண்டுகளில் 540 சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சைகள் எங்கள் மையம் மூலம் செய்யப்பட்டுள்ளது.2020-21-ல் 98 சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சையை எங்கள் குழு செய்துள்ளது”என்றார்.

நிகழ்ச்சியில், காவேரி மருத்துவமனையின் சிறுநீரக டாக்டர் டி.ராஜராஜன், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் எஸ்.செந்தில்குமார், டாக்டர் எஸ்.சசிகுமார் மற்றும் சிறுநீரகவியல் டாக்டர்கள் பாலாஜி, வேல்அரவிந்த் உள்ளிட்ட சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை குழுவினர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.