திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 24 பதவிகளுக்கு தேர்தல்

0 638
Stalin trichy visit

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 13-ந் தேதி அறிவித்தது.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மரணம், ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் காலியாக உள்ள 3 ஒன்றிய கவுன்சிலர், 2 ஊராட்சி தலைவர், பஞ்சாயத்துகளில் 19 வார்டு உறுப்பினர்கள் என 24 பதவிகளுக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வையம்பட்டி ஒன்றியம் 6-வது வார்டு (எஸ்.சி-பெண்), மருங்காபுரி ஒன்றியம் 10-வது வார்டு (பொது-பெண்), துறையூர் ஒன்றியம் 13-வது வார்டு (பொது) ஆகிய 3 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கும், லால்குடி ஒன்றியம் சிறுமருதூர் ஊராட்சி (பொது), புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் ஊராட்சி (பொது) ஆகிய 2 ஊராட்சி தலைவர்கள் பதவிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும், அந்தநல்லூர் ஒன்றியம் போசம்பட்டி ஊராட்சி 7-வது வார்டு (பொது – பெண்), மண்ணச்சநல்லூர் ஒன்றியம் கொணலை ஊராட்சி 8-வது வார்டு (பொது- பெண்), ஓமாந்தூர் ஊராட்சி 1-வது வார்டு (பொது), மருங்காபுரி ஒன்றியம் தெத்தூர் ஊராட்சி 1-வது வார்டு (பொது), துறையூர் ஒன்றியம் சேனப்பநல்லூர் ஊராட்சி 2-வது வார்டு (பொது (பெண்), லால்குடி ஒன்றியம் கொன்னைகுடி ஊராட்சி 5-வது வார்டு (பொது), மணப்பாறை ஒன்றியம் சீகம்பட்டி ஊராட்சி 1-வது வார்டு (பொது-பெண்), மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சி 8-வது வார்டு (எஸ்.சி-பெண்), மருங்காபுரி ஒன்றியம் கொடும்பப்பட்டி ஊராட்சி 4-வது வார்டு (எஸ்சி-பொது), தேனூர் ஊராட்சி 8-வது வார்டு (பொது), முசிறி ஒன்றியம் ஜெயங்கொண்டம் ஊராட்சி 2-வது வார்டு (பொது), தா.பேட்டை ஒன்றியம் பைத்தம்பாறை ஊராட்சி 4-வது வார்டு (பொது-பெண்), தும்பலம் ஊராட்சி 7-வது வார்டு (பொது), திருவெறும்பூர் ஒன்றியம் கீழக்குறிச்சி ஊராட்சி 10-வது வார்டு (பொது-பெண்), பழங்கனாங்குடி ஊராட்சி 9-வது வார்டு (பொது), தொட்டியம் ஒன்றியம் ஸ்ரீராமசமுத்திரம் ஊராட்சி 5-வது வார்டு (பொது), எம்.களத்தூர் ஊராட்சி 6-வது வார்டு (எஸ்சி-பெண்), உப்பிலியபுரம் ஒன்றியம் ஆங்கியம் ஊராட்சி 6-வது வார்டு (பொது-பெண்), மணப்பாறை ஒன்றியம் கே.பெரியப்பட்டி ஊராட்சி 2-வது வார்டு (பொது) ஆகிய 19 வார்டு உறுப்பினர்களுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 24 பதவிகளுக்குமான தேர்தல் அக்டோபர் மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது. இதில் 3 ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மட்டும் அரசியல் கட்சிகள் சார்ந்து அவற்றின் சின்னங்களின் அடிப்படையில் நடைபெறும். ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் தேர்தல் கட்சி சார்பின்றி பொதுச் சின்னங்களின் அடிப்படையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.