மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற சிறைத்துறை பணியாளர்கள் சங்க கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார்
. கூட்டத்தில் குடும்ப நல நீதி ரூ.50 ஆயிரத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு ரூ.1000 வழங்க வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.