திருச்சியில் 82 பேருக்கு கருப்பு பூஞ்சை – 15 பேருக்கு அறுவை சிகிச்சை – அரசு மருத்துவமனை டீன் வனிதா பேட்டி

0 773
Stalin trichy visit

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கருப்பு புஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை முதல்வர் வனிதா செய்தியாளர்களை சந்தித்து பேசானார். அப்போது பேசிய அவர்…100 படுக்கைகள் கொண்ட பிரத்யேக வார்டில் கருப்பு புஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பயாப்சின் டெஸ்ட் எடுத்து உடனடியாக நோய் கருப்பு புஞ்சை நோய் தானா ? என்று 24 மணி நேரத்தில் கண்டு பிடிக்கின்றோம்,பின்னர் அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

சாதாரண பேக்டீரியாவால் கூட கண்ணில் பிரச்சினை வரும் – ஆனால் அதை இயல்பாக சரி செய்ய முடியும். கருப்பு புஞ்சைக்கு முழுமையாக சிகிச்சை 6 முதல் 12 வாரம் வரை கூட ஆகிறது. Uncontrolled sugar தான் மிக முக்கிய பிரச்சினை – கொரோனோவிற்கு சிகிச்சை பெற்று வீடு திருப்புவோர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு தான் அதிகம் கருப்பு புஞ்சை ஏற்படுகிறது. முழுமையாக 5 லட்சம் வரை கூட ஆகிறது – அரசே முழு செலவை ஏற்கிறது. 82 பேருக்கு இது வரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு  மருத்துவமனைக்கு  கருப்பு புஞ்சையால் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
கண்,தாடை,சைனஸ் என கருப்பு புஞ்சை படிப்படியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. திருச்சியில் இதுவரை தாடையில் 15 பேருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.
கருப்பு புஞ்சைக்கு மருந்து உண்டு – எளிதாக இது பரவாது” என்றார்
கொரோனோவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை  இனை நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்று சான்றிதழ் அளிப்பதாகக் புகார்கள் வருகிறது என்ற கேள்விக்கு ? “7.1 மற்றும் 7.2 என்கிற இரண்டு முறையை பின்பற்றுகிறார்கள் – முன்னர் அது போன்ற பிரச்சினை இருந்தது, ஆனால்  தற்போது இந்த சிக்கல்கள் இல்லை,கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அதற்கான சான்றிதழ்களை அளிக்கிறோம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.