திருச்சியில் அடையாளம் தெரியாத பெண் மர்மமான முறையில் சாவு!
திருச்சி திண்டுக்கல் சாலை தீர நகரில் தனியார் பள்ளி எதிர்புறம் உள்ள முட்புதரில் நேற்று அடையாளம் தெரியாத பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நீதிமன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் இறந்த பிறகு சுமார் 55 வயது இருக்கலாம் என்றும், அவர் அருகே மதுரை மேலூர் என்று குறிப்பிடப்பட்டிருந்த மஞ்சள் பையில் பூச்சிமருந்து குடுவையும் கிடந்துள்ளது.
இதையடுத்து சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.