திருட்டு வழக்கில் கைது செய்த சிறுவன் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோட்டம்!

0 376
Stalin trichy visit

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அன்பிலார் நகரை சேர்ந்தவர் துரைராஜ் தனியார் நிறுவன காவலாளி அணை இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அன்று மாலை வேலை முடிந்து வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த மூன்றரை பவுன் நகை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து எடமலைப்பட்டி போலீசில் துரைராஜ் புகார் செய்துள்ளார் அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சியை கொண்டு ஆய்வு செய்து அதே பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் துரைராஜ் வீட்டிற்குள் சென்று திருடியது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனை பிடித்து காவல்நிலையத்தில் விசாரித்தபோது நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சிறுவர்கள் சிறுநீர் கழிக்க வேண்டும் என பணியிலிருந்த காவலரிடம் கூறிவிட்டு காவல் நிலையம் பின்புறமாக இருந்த கழிவறைக்கு போலீசார் அழைத்து செல்லும்போது காம்பௌண்ட் சுவர் ஏறி தப்பி ஓடி சென்று விட்டார். இந்த நிலையில் தப்பி ஓடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.