செல்போன் பேசியபடி பள்ளி 4வது மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவி!

0 563
Stalin trichy visit

திருச்சி ராஜா காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் டாக்டர் பாலன். இவர் புதுகை மாவட்டம் அறந்தாங்கியில் கிளினிக் வைத்துள்ளார் இவரது மகள் கவிஸ்ரீ (16).

இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ் 1 படித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்றவர் நான்காவது மாடி ஏறி மொட்டை மாடியில் கைப்பிடி சுவர் அருகே நின்றுகொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பள்ளி நிர்வாகத்தினர் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.