திருச்சி கிழக்கு தொகுதி கீழரண் சாலையில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பேருந்து வசதி வேண்டும் எனவும் காலையில் பள்ளிக்கு செல்ல சிரமமாக இருப்பது என எம்எல்ஏ இனிகோ இருதயராஜூடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று திருச்சி கிழக்குத் தொகுதி கீழரண் சாலையில் இயங்கும் அரசு பள்ளி மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்று புதிய வழித்தடத்தில் பேருந்தை சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் துவக்கி வைத்தார்.