பெண் வயிற்றில் இருந்த 6 கிலோ கட்டியை அகற்றி அசத்திய ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்!
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பொது மருத்துவமனையில் பெண் நோயாளியின் வயிற்றில் இருந்த 6 கிலோ எடை கொண்ட கட்டியை அறுவை சிகிச்சையின் வாயிலாக அகற்றிய மருத்துவ குழுவினர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மணமேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடுமையான வயிற்றுவலி காரணமாக முசிறி மற்றும் அருகிலுள்ள குளித்தலை போன்ற பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்,ஆனால் எந்தவித பலனும் இல்லாத காரணத்தினால் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை நாடியுள்ளார். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவரின் வயிற்றில் மிகப்பெரிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இதனை அடுத்து பொது அறுவை சிகிச்சை நிபுணர் இளவரசன் தலைமையில் மயக்க மருந்து நிபுணர் ராஜசேகர்,செவிலியர்கள் மணிமேகலை,சுஜாதா உதவியாளர் மணி உள்ளிட்டோர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை செய்து அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த ஆறு கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர்.
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சைகளில் இந்த அளவிற்கு பெரிய கட்டியை அகற்றியது இதுவே முதன் முறையாகும்,மேலும் நோயாளிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் உள்ளார்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo