முசிறி தாலுகா தலைமலை அடிவாரம் ஸ்ரீ பூமாதேவி ஸ்ரீ நீலா தேவி லட்சுமி நாராயண பெருமாள் கோவில் செயல் அலுவலர் சங்கர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் தா.பேட்டை ஒன்றியம் தலைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூமாதேவி, ஸ்ரீ நீலாதேவி, லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை உற்சவம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பத்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.