திருச்சியில் 130 போலீசார் பணியிட மாற்றம்

0 337
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி பகுதிகுட்பட்ட கண்டோன்மெண்ட், தில்லை நகர், பாலக்கரை, உறையூர், ஸ்ரீரங்கம் உள்பட 14 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் பெண் போலீசார் உள்பட 1200 போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு போலீஸ் நிலையத்தில் 3 வருடத்திற்கு மேல் பணியாற்றிய போலீசார் வேறு போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற விதிமுறை படியும், சொந்த விருப்பத்தின் பேரிலும் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் மாறுதலாகி சென்ற போலீஸ் கமிஷனர் அருண் நேற்று மனு அளித்த 130 போலீசாரை மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.