கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 27 நபர்கள் குலுக்கல் முறையில் பரிசு

0 367
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பு முகாம்கள் மூலம் நாள்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க கடந்த 19.09.2021 அன்று திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 126 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. கோ.அபிசேகபுரம் கோட்டத்தில் நடைபெற்ற 34 முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 27 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுபரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் மகேஸ்வரி முதல் பரிசாக கேஸ் அடுப்பும், பாபுலால் 2ம் பரிசாக கேரம்போடும், பிரியதர்ஷினி, நந்தகுமார், கௌசியா பர்வின், விஜயன், புவனேஸ்வரி, சரளா தேவி, ராம்தாஸ், நிர்மலா, சுப்புலெட்சுமி, V.கணேசன், விஜயலெட்சுமி, K.வீரமணி, மனோஜ்குமார் ரசூல் பீபி, சாரதா, ஹனிபா, சாலினி, இந்திராணி, M.சத்யா, ஜெயந்தி, ரமாமணி ஷகிரா, முகம்மது இப்ராஹிம், ஷானவாஸ், உமா மகேஸ்வரி ஆகியோருக்கு 3ம் பரிசாக ரூ.1000 மதிப்புள்ள மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.