திருச்சி எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நாளை மாபெரும் மராத்தான் போட்டி!

0 357
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் இருங்களூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தின் சார்பாக நாளை (ஞாயிற்றுக்கிழமை)  மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த போட்டியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டரும், பெண்களுக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

இதில் முதல் பரிசாக 5 ஆயிரமும், இரண்டாவது பரிசாக 4 ஆயிரமும், மூன்றாவது பரிசாக 3 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டியினை திரைப்பட நடிகர் சுந்தரராஜன் தொடங்கி வைக்க உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.