திருச்சி தென்னூர் வாமடம் பகுதியில் நேற்று இரவு மின் கசிவினால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் நான்கு வீடுகள் எரிந்து சாம்பலானது.

இந்த தகவல் அறிந்து மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று நேரில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் காஜாமலை விஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.