திருச்சி கோட்டை நாடுகுஜிலித் தெருவை சேர்ந்தவர் ஜமால் முகமது (வயது 61). இவர் டைமண்ட் பஜாரில் பிளாஸ்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் இரவு கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். மீண்டும் மறுநாள் காலையில் வழக்கம் போல வந்து கடையை திறக்க வந்தார். அங்கு அவரது கடையின் பூட்டு உடைந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் கடையில் வைத்திருந்த பணம் ரூ.50 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.