முத்தீஸ்வரர் கோவில் குத்தகை நிலங்களை மீட்க கோரிக்கை
திருச்சி, மே 29 முக்தீஸ்வரர் கோவில் நிலத்தை குத்தகைக்கு புதிய நபர்களுக்கு விட வேண்டும் என்று பாஜக நகரம் சார்பாக கோரிக்கை.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில் நிலங்கள் அதிக அளவில் உள்ளது. அதிலும் முத்தீஸ்வரர் கோவில் நிலத்தை புதிய நபர்களுக்கு குத்தகைக்கு கொடுக்க வேண்டும். நீண்ட காலமாக அனுபவித்து வரும் பரம்பரையாக உள்ள நபர்களிடமிருந்து குத்தகை நிலங்களை மீட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் பொது மக்களை திரட்டி பாஜக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தபடும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.