குணசீலம் கோவிலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை

0 415
Stalin trichy visit

திருச்சி, மே 30  திருச்சி மாவட்டம், முசிறி அருகே பிரசித்தி பெற்ற குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடாஜலபதி திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் கருங்கல் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குணசீலத்திற்கு வருகை தந்துள்ளார். அவருக்கு நாராயண ராமானுஜ ஜூயர் சுவாமி, டிரஸ்டி பிச்சுமணி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா, தாசில்தார் லோகநாதன் ஆகியோர் பங்கேற்பு. திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவில் குணசீலம் மகோத்மியம் மற்றும் வள்ளுவத்தில் மெய்ஞானம் என்ற நூல்களை ஆளுநர் வெளியிடுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.