காணாமல் போன 25 செல்போனை கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைப்பு

0 404
Stalin trichy visit

துறையூர் போலீசார் காணாமல் போன 25 செல்போனை கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் அடிக்கடி செல்போன் காணாமல் போனதாக புகார்கள் வந்த நிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் சஞ்சீவி தமிழ்செல்வன் ரவிச்சந்திரன் தனிப்படை அமைத்து காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் திருடு போனால் 25 செல்போன்கள் மீட்கப்பட்டது உடனடியாக செல்போன் காணாமல் போனதாக புகார் அளித்த உரிமையாளர்கள் வி .அ. சமுத்திரம் சேர்ந்த சரண்ராஜ், சித்திரப்பட்டி சேர்ந்த மணிமாறன், துறையூர் சேர்ந்த கண்ணகி ,பாலகிருஷ்ணம்பட்டியை சேர்ந்த மோனிஷா, துறையூர் சிவகுமார் உட்பட 25 நபர்களை வரவழைத்து துறையூர் இன்ஸ்பெக்டர் முத்தையன் அவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். செல்போன் உரிமையாளர்கள் காவல்துறைக்கு பாராட்டுகளையும் நன்றி தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.