வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை : ஒருவன் சிக்கினான்

0 335
Stalin trichy visit

திருச்சி, மே 31  திருச்சியில்  வீட்டை பூட்டி கோயிலுக்கு சென்ற குடும்பத்தினருக்கு அதிர்ச்சி – 25 பவுன் தங்க நகை 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கால் கிலோ வெள்ளி கொள்ளை – வீட்டிற்குள் திருடர்கள் கைவரிசை

திருச்சி கூனிபஜாரை சேர்ந்த சக்திவேல் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் பழனி கோயிலுக்கு வீட்டை பூட்டி விட்டு புறப்பட்டு சென்றார். இன்று 7 மணி அளவில் வீட்டிற்கு வந்த பொழுது வீட்டிற்குள் நான்கு திருடர்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறை பொதுமக்கள் அனைவரும் வீட்டை சுற்றி வளைத்தபொழுது திருடர்கள் தப்பி ஓடினர். அதில் ஒருவர் பிடிபட்டுள்ளார். வீட்டிற்குள் இருந்து 25 பவுன் தங்க நகை 20ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கால் கிலோ வெள்ளி களவு போய் உள்ளது. பாலக்கரை காவல் நிலை போலீசார் பொதுமக்கள் ஆகியோர் சேர்ந்து பிடித்துக் பிடித்துக் கொடுத்த ஒருவரை தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.