குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, ஜூன் 2 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தெற்கு அஞ்சல்காரன்பட்டி சீத்தப்பட்டியில் வசித்து வருபவர் அருண் ஸ்ரீகரன். இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவர் ஜாஸ்மின் ராக்ஷி(24) என்பவரும்சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் குழந்தை இல்லாத காரணத்தாலும், அருண் ஸ்ரீகரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாலும், கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 10:00 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த ஜாஸ்மின் ராக்ஷி தனது சேலையில், பேன் மாட்டும் கம்பியில் தூக்கு மாட்டி இறந்துள்ளார். தகவலறிந்த வையம்பட்டி காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை முடித்து உறவினர்கள் வசம் ஒப்படைத்தனர்.மேலும் வையம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ( திருமணமான மூன்று வருடத்தில் இறந்ததால்) வையம்பட்டி காவல் ஆய்வாளர் தனபாலன், மணப்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..