மின்மாற்றியில் தீ விபத்து

0 404
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 2  திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே மின் மாற்றி தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து மின்வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே திருச்சி – திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையின் சாலையோரம் இருந்த மின் மாற்றியிலிருந்து நேற்று காலை திடீரென புகை வெளியாகியுள்ளது. சிறிது நெரத்தில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் தண்ணீர் மூலம் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மின் மாற்றி தீப்பிடித்து எரிந்த நிலையில், அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. . இச்சம்பவம் குறித்து மின்வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.