திருச்சியில் அனுமதியின்றி செயல்படும் காப்பகங்கள் மீது நடவடிக்கை – குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் எச்சரிக்கை

0 510
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் குழந்தைகள் காப்பகங்கள் மீது உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் – தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

கொரோனா காலகட்டத்தில் குழந்தைகள் பாதிப்பு குறித்தும், 3வது அலையில் குழந்தைகள் பாதிக்காதவாறு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைள், குழந்தைகள் தொடர்பான துறை அதிகாரிகளுடனான தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பங்கேற்கும் மறு ஆய்வுக்கூட்டம்  மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றதில் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனைகள் பெறப்பட்டு விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறுகையில்…”20மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட குழந்தை இல்லங்களை ஆய்வுசெய்ததுடன், மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் கன்னியாகுமரி தொடங்கி நடைபெறுகிறது.

மாவட்டவாரியனா ஆய்வுக்கூட்டம் நடத்தி குழந்தைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.