வரும் திங்கள்கிழமை முதல் மீண்டும் நேரடி குறைதீர்க்கும் முகாம்!

0 426
Stalin trichy visit

கடந்த காலங்களில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் நடத்தப்பட்டு வந்த நேரடி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும் மக்கள் குறை தீர்ப்பு நாள் நிகழ்ச்சிகள் அதிகம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கடந்த காலங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அவரிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்திட அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை தொடங்கி ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் குறை தீர்ப்பு நாளில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெறப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கான கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக கொடுத்து தீர்வு காண கோரப்படுகிறார்கள் வரும்போது மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நிலையான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.