திருநங்கைகள் புதிதாக நலவாரிய அடையாள அட்டை பெற பதிவு

0 427
Stalin trichy visit

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தமிமுன்நிஷா தொடங்கி வைத்தார். இதில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, குடும்ப அட்டை, திருநங்கைகள் நல வாரிய அடையாள அட்டை, அகிய விவரங்களை பதிவு செய்யவும் பெயர் மற்றும் முகவரி திருத்தம், புதிதாக நலவாரிய அடையாள அட்டை பெற்றிட பதிவு செய்யப்பட்டது.

மேலும் பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு தேவையான ஆவனங்களை பெற நடவடிக்கை எடுத்தனர்.மேலும் இந்த முகாமில் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோர் வழிகாட்டுதல் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.