காந்தி ஜெயந்தியை ஒட்டி திருச்சியில் 286 இடங்களில் கிராம சபை கூட்டம்!
திருச்சி மாவட்டத்தில் காஞ்சி ஜெயந்தியை ஒட்டி 286 இடங்களில் கிராமசபை கூட்டங்கள் நடந்துள்ளது.

குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.
இதில் டெல்டா மாவட்டத்தில் 1809 இடங்களில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 286 இடங்களை கிராம சபை கூட்டம் நடந்தது. திருச்சி திருவெறும்பூர் குவளக்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
கிராமசபை கூட்டங்களில் பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் அனைவரும் முகக் கவசங்கள் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கினார். மேலும் மின்விளக்கு அமைப்பது, சாலையை மேம்படுத்துவது, அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரம் குடிநீர் வழங்குவது உள்ளிட்ட ஆலோசனைகளையும் நடத்தினர்.