“கதர் ஆடைகள் உடுத்துவோம், நெசவாளர்களை உயர்த்துவோம்” – மக்கள் சக்தி இயக்கம் சார்பாக காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்!

0 491
Stalin trichy visit

திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் இன்று பொன்மலையில் நடைபெற்றது .


காந்தி சிலையிற்கு மாலையிற்கு பதிலாக “கதராடைகளை உடுத்துவோம்: நெசவாளர்களை உயர்த்துவோம் ” என நோக்கத்தில் கதர் ஆடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. காந்தி பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இயற்கை பாதுகாக்க வேண்டி அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது . மேலும் உன்னதமான தமிழகம் காண , முழுமையான மது விலக்கை ஆதரீப்பீர் , என விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.


இதில் மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், கலைக்காவிரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும், தண்ணீர் அமைப்பு செயலாளருமான தி. சதீஸ்குமார், மக்கள் சக்தி இயக்க மாநகர நிர்வாகி விஜயகுமார் , மகளிர் அணி கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன் , லலிதா, எம்.நரேஷ்குமார் , வெங்கடேஷ், தயானந்த், மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.