திருச்சி அருகே வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை

0 156
Stalin trichy visit

திருச்சி, செப்.15  சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு ஜுவல்லரி மேலாளராக
பணிபுரிந்து வருபவர் பிரதீப் ஷாட், இவர் சனிக்கிழமை காரில் 3 பேருடன் சென்னையிலிருந்து புறப்பட்டு  திண்டுக்கலில் ஆபரண நகைகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்கத்துடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சனிக்கிழமை  இரவு 10.30 மணி அளவில் திருச்சி மாவட்டம் சமயபுரத்தை கடந்து சிறுகனூர் செல்லும் முன்பாகவே எஸ் ஆர் எம் கல்லூரியை கடந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை கீழவங்காரம் பிரிவு ரோடு தாண்டி சிறிது தூரத்தில் காரில் இருந்தவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக காரிலிருந்து இறங்கியுள்ளனர்.
அப்போது பின்னால் வந்த காரில் நான்கு பேர் இறங்கி முன்னாள் இயற்கை உபாதை கழித்துக் கொண்டிருந்தவர்கள் மீது முகத்தின் மிளகாய் பொடியை தூவி விட்டு கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த 2 பேக்குகளில் 10 கிலோவிற்க்கும் மேல் இருந்த தங்கத்தை பறித்துக் கொண்டுஅவர்கள் வந்த காரில் தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து சென்னை சவுகார்பேட்டை தனியார் ஜுவல்லரி மேலாளர் பிரதீப் கான் உள்ளிட்ட மூன்று பேரும் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
குறிப்பாக திண்டுக்கல்லில் இருந்து இவர்கள் நகைகளை விற்பனை செய்துவிட்டு மீண்டும் தங்கத்தை காரில் வைத்து சென்னைக்கு செல்லும்போது திண்டுக்கல்லில் இருந்து பின் தொடர்ந்து வந்த கும்பல் கொள்ளை அடித்ததாக முதல் கட்ட போலீசாரின் விசாரணையில் தெரிய வருகிறது.

4 தனிப்படை அமைப்பு

மேலும் ஜுவல்லரி மேலாளர் உள்ளிட்ட மூன்று பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.   இரவு 10.30 மணி அளவில் 10 கிலோவிற்கு மேல் தங்கத்தை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்படி நான்கு தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு 12 கோடி இருக்கும் என தெரிய வருகிறது கொள்ளையர்கள் திண்டுக்கல்லில் இருந்து தொடர்ந்து வந்து கொள்ளை அடித்ததாகும் கூறப்படுகிறது. இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஜுவல்லரி மேலாளர் மற்றும் ஊழியர்களும் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணைநடத்தி வருகின்றனர்.
மேலும் சமயபுரம் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை போலீசாஆய்வு செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.