திருச்சி காவிரி படித்துறைகளில் அனுமதி மறுப்பு; போலீஸ் குவிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் வெள்ளி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கோவில்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாளய அம்மாவசை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபம் உள்ளிட்ட படித்துறைகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக காவிரி கரையில் உள்ள அனைத்து படித்துரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்