திருச்சி மாவட்டம், மணிகண்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். நேற்று முன்தினம் கேரளா மாநிலம் பாலக்காட்டில் விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குடும்பத்தினர் அவரது உடலை இறுதி சடங்கு செய்வதற்க்காக திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நல்லிணக்க சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது காசியில் பயிற்சி பெற்று, திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வரும் அகோரி மணிகண்டன் தன் சிஷ்ய அகோரிகள் உடல் முழுவதும் திருநீறு அணிந்து கொண்டு மயானத்தில் வந்தனர்.

மயானத்தில் வெங்கடேசனின் குடும்பத்தினர் செய்ய வேண்டிய இறுதி சடங்கை முடித்த பின்னர் வெங்கடேஷ் ஏற்கனவே அகோரி மணிகண்டனிடம் சிஷ்யராக இருந்ததால் அகோரி மணிகண்டன் சடலத்தின் மீது அமர்ந்து மந்திரங்கள் ஜெயித்து ஆன்ம சாந்தி பூஜை செய்தார்.
அப்போது சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும் சங்கு ஒலி எழுப்பியும் பூஜையில் ஈடுபட்டனர்.
குடும்பத்தினரின் அனுமதியோடு ஆன்ம சாந்தி பூஜை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த வினோத பூஜையானது காசியில் மட்டுமே காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது