வைகுண்ட ஏகாதசி 2-ம் நாள் : பாண்டியன் கொண்டையில் நம்பெருமாள் சேவை

0 138
Stalin trichy visit

திருச்சி, டிச.22 ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்வசம் 2ம் நாள்: பாண்டியன் கொண்டையில் நம்பெருமாள் சேவை

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து உற்சவத்தின் 2ம் நாளான நேற்று (21.12.2025) காலை, ஸ்ரீ நம்பெருமாள், முத்து பாண்டியன் கொண்டை சாற்றி, அதில் சந்திர – சூர்ய வில்லை, கலிங்கத்துராய், சிகப்பு கல் நெற்றி பட்டை  சாற்றி, மகர கர்ண பத்ரம் அணிந்து திருமார்பில் – கண்டாபரணம், சந்திர ஹாரம், ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம், இரு மார்பிலும்  புஜ கீர்த்தி, நெல்லிக்காய் மாலை, தங்க பூண் பவழ மாலை, வரிசையாக பெரிய சிகப்பு கல் அடுக்கு பதக்கங்கள், 8 வட முத்து மாலை, சிகப்புக் கல் அபய ஹஸ்தம்,அதில் கோலக்கிளி எடுத்து சாற்றி, வெண்பட்டு அணிந்து, பின் சேவையில் அண்டபேரண்ட பக்க்ஷி பதக்கம் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.